புதிய சுகாதார அமைச்சருக்கு கூடுதல் அதிகாரங்கள்? - வெளியாகியுள்ள தகவல்
மருந்துகள் தொடர்பான குறிப்பிடத்தக்க அதிகாரங்களை புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு இல்லாத பல அதிகாரங்கள் புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வழங்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மருந்துகள் தொடர்பான அதிகாரங்கள் தற்போது அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடு செய்யப்பட்ட தரப்பில் மருந்து நிறுவனங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சன்னா ஜயசுமனவின் சில அழுத்தங்கள் குறித்து மருந்து நிறுவனங்கள் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri