சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அதானி குழுமத்தின் அடுத்த வெற்றி
இஸ்ரேலிய முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கி உள்ளது.
ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
முதலீட்டு வாய்ப்புகள்
நிகழ்ச்சியில் உரையாற்றிய அதானி,முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் துறைமுகத்தில் ரியல் எஸ்டேட்டை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உட்பட இஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான அதானி நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைஃபா நகரத்தை வளர்ச்சி அடைய செய்ய உள்ளதாக அதானி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இது தொடர்பில் பிரதமர் நேதன்யாகு, அதானி குழுமத்துடனான ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கல் என்றும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை கணிசமாக மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டு
ஹைஃபா துறைமுகமானது சரக்கு கப்பல்களை கையாளும் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும்.
சுற்றுலா பயணக் கப்பல்களை அனுப்புவதில் மிகப்பெரிய துறைமுகமாக விளங்குகிறது.
அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க், அதானி குழுமத்திற்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டது.
இந்த விவாகரம் உலகளவில் விவாதிக்கப்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்த, அதானி குழும பங்குகள் சரியத் தொடங்கின.
இந்த சரிவுக்கு மத்தியில் அதானி குழுமம் புதிய துறைமுகத்தை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.