அதானி நிறுவனங்கள் விவகாரம்: இந்திய நாடாளுமன்ற அவைகள் முடக்கம்
அதானி நிறுவனங்கள் விவகாரத்தால், இந்திய நாடாளுமன்ற இரண்டு அவைகளில் நேற்றும் அலுவல்கள் எதுவும் இடம்பெறவில்லை என கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டத்தால் பதற்றநிலை தோன்றியது.
இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதானி விவகாரம்
இந்த அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு
அவைகளிலும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதன் காரணமாக இரண்டு அவைகளும் வழக்கமான அலுவல்கள் நடைபெறாமையால், தொடர்ந்தும்
மூன்றாம் நாளாக நேற்றும் முடங்கியுள்ளன.
இந்தநிலையில், அதானி விவகாரம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை தவிர்க்க பிரதமர்
மோடி எதனையும் செய்வார் என்று காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 5 மணி நேரம் முன்

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri
