சித்தர் ஏடுகளில் இலங்கை தொடர்பில் கூறப்பட்டுள்ளது என்ன!
2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும், அதில் இலங்கை என்ற தீவே காணாமல் போகும் என சித்தர் ஏடுகளில் கூறப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் அனுமோகன் ஒரு நேர்காணலில் கூறியமை பேசுபொருளானது.
இந்நிலையில் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் அவரது கனவில் சித்தரொருவர் கலியுக ஆரம்பங்களில் ,முக்கடலும் பொங்கும், முக்கடலும் பொங்கும் போது இராவண பூமி கடலில் மூழ்கும் என தெரிவித்ததாக கூறினார்..
முக்கடலும் பொங்கும் என்றால் நீரினால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படும் என்பதையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இயற்கையை மீறி மனிதர்கள் செயற்படும் போது, இயற்கை அதற்கு தண்டனை கொடுக்கும் என்றார்.
இது தொடர்பாக விரிவான விளக்கங்களுடன் வருகிறது கீழுள்ள காணொளி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |