மத்திய வங்கி ஆளுநரின் செயற்பாடு நகைப்பிற்குரியது : சஜித் பிரமதாச
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் செயற்பாடு நகைப்பிற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச (Sajith Premadasa ) தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
பிட்ச் ரேடிங் நிறுவனத்தின் கடன் தரப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய வங்கி ஆளுநர் கூறுவது நகைப்பிற்குரிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
பிட்ச் ரேடிங் நிறுவனம் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரப்படுத்தல் நிறுவனமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தரப்படுத்தல் நடவடிக்கைகள் விஞ்ஞானபூர்வ நடைமுறைகளுக்கு அமைய உண்மையான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனை பொய் என யாராலும் கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களினால் செய்யப்படும் மோசடிகளைப் போன்றே பிட்ச் ரேடிங் தரப்படுத்தல் நிறுவனமும் மேற்கொள்ளும் என அரசாங்கம் கருதுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது கையிருப்பில் இருக்கும் டொலர்களின் பெறுமதி 1.6 பில்லியன் டொலர்கள் மட்டுமே எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.