தொடருந்து தொழிற்சாலையை திருடர்களிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை
இரத்மலானையில் அமைந்துள்ள தொடருந்து தொழிற்சாலையை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் வெகுசனத் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரத்மலானையில் அமைந்துள்ள தொடருந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போது அதற்கான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு வழங்க முடியாத நிலை

இலங்கையின் மிகப் பெரும் அரச தொழிற்சாலையான தொடருந்து தொழிற்சாலையில் தொடருந்துகளின் திருத்தப் பணிகள், எஞ்சின் பராமரிப்புப் பணிகள், தொடருந்து பெட்டிகள் தயாரிப்பு, உதிரிப்பாகங்கள் தயாரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் உள்ளிட்ட ஏராளம் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தத் தொழிற்சாலை பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ளதன் காரணமாக அங்குள்ள பாதுகாவலர்களால் மொத்த தொழிற்சாலைக்கும் உரிய முறையில் பாதுகாப்பு வழங்க முடியாதுள்ளது.
இதன் காரணமாக திருடர்கள் மற்றும் போதைக்கு அடிமையானோர் இந்தத் தொழிற்சாலையின் உதிரிப்பாகங்களை திருடிச் சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து அரசாங்கத்துக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றனர்.
அவ்வாறான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு பொலிசாரின் ரோந்து மற்றும் காவல் பணிகளை அதிகரிக்கவும், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam