இலங்கையில் பெட்ரோலிய நெருக்கடி! புதிய நடைமுறையின் முன்னோடித்திட்டம் ஆரம்பம்
இலங்கையில் முச்சக்கரவண்டிகளை மின்மயமாக்கும் புதிய நடைமுறையின் முன்னோடித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னோடித் திட்டம் ஆரம்பம்
இலங்கை எதிர்நோக்கும் பெட்ரோலிய நெருக்கடிக்கு தீர்வாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் 300 முச்சக்கரவண்டிகளை மின்மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இத்திட்டம் தொடர்பான சட்டப் பின்னணியை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக் கொள்ளும் விசேட மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக நிஷாந்த வீரசிங்க கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் தொழிநுட்ப மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் அண்மையில் மின்சார முச்சக்கரவண்டிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri