இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! பிரதமர் மஹிந்த எடுக்கவுள்ள நடவடிக்கை
இலங்கையைில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்கள் பலர், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலை ஒன்றை நிர்ணயித்துள்ள போதிலும், அதிக விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொருட்களின் விலை அதிகாரிப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
சில ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அரிசியை சந்தைக்கு விடுவித்தாலும், சில பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்கள் அரிசியை விடுவிப்பதில்லை என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சர்களான பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, மஹிந்தானந்த அழுத்கமகே, விமல் வீரவன்ச ஆகிய உறுப்பினர்கள் உட்பட குழுவினர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் பல பால் மா, சீமெந்து மற்றும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் தலைமையிலான வாழ்க்கைச் செலவு குழு விரைவில் கூடி இது குறித்து விவாதித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
