குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் மீது பக்கச்சார்பில்லாமல் நடவடிக்கை : அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

Jaffna Sri Lanka Economic Crisis Attempted Murder Angajan Ramanathan Sri Lanka Fuel Crisis
By Praveenk Jun 24, 2022 11:37 AM GMT
Report

கறுப்பு சந்தை வியாபாரிகளாலும், அடாவடி கும்பல்களாலும் இன்று ஓர் இளைஞனின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகளும், மோதல் நிலைகளும் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்ற சூழலில் ஏற்பட்டுள்ள இந்த மரணம் அதன் தீவிர நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழக்கூடாது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இளைஞர் ஒருவர் நேற்று (23) தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் உயிரிழந்த இளைஞனுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் தனது உத்தியோக பூர்வ முகநூலில் நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் மீது பக்கச்சார்பில்லாமல் நடவடிக்கை : அங்கஜன் இராமநாதன் கோரிக்கை | Action Taken Impartially Against Those Confusion

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

முகநூல் பதிவு

எனது ஆதரவாளரும், J/186 உடுவில் வடக்கு கிராம இணைப்பாளருமான செல்வரத்தினம் பிரசாந்த் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்காக காத்திருந்தவேளை ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.

செல்வரத்தினம் பிரசாந்த் துடிப்பான ஆற்றல் மிகுந்த ஓர் இளைஞராக எனது அரசியல் பணிகளில் பங்காற்றியுள்ளார். நேர்மையுடனும் அன்புடனும் பழகும் குடும்ப சூழலில் வாழ்ந்த இளைஞனை இன்று நாம் இழந்துவிட்டோம்.

குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் மீது பக்கச்சார்பில்லாமல் நடவடிக்கை : அங்கஜன் இராமநாதன் கோரிக்கை | Action Taken Impartially Against Those Confusion

அண்மையில் உடுவில் வடக்கு கிராமத்துக்கு நாம் சென்றபோது, அக்கிராம மக்களின் தேவைகள், பிரச்சினைகள் குறித்து தெளிவான விளக்கங்களை முன்வைத்திருந்தார்.

அவரது சமூகம் மீதான பார்வையும், மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும் எனக்கு எப்போதும் பிடித்தமானவை. ஒரு ஆற்றல் மிகுந்த, சிறந்த அரசியல் பார்வை கொண்ட ஒரு இளைஞன் இத்தகைய துர்ப்பாக்கிய நிலையில் உயிரிழந்துவிட்டார்.

இந்த மரணம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது. மனிதநேயத்துக்கு விரோதமான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். கறுப்புச்சந்தை வியாபாரிகளாலும், அடாவடி கும்பல்களாலும் இன்று ஓர் இளைஞனின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது.

[EW844L ]

அண்மைக்காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகளும், மோதல் நிலைகளும் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த மரணம் அதன் தீவிர நிலையை வெளிப்படுத்தியுள்ளது.இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழக்கூடாது.

கோரிக்கை

யாழ் மாவட்ட அரச நிர்வாகத்தின் கீழ் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படவுள்ள நிலையில்,

* எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மேலதிகமாக எவரையும் தம்மோடு வைத்திருப்பதற்கு அனுமதிக்க கூடாது.

* முறையான வரிசைகளை பொலிஸாரும், எரிபொருள் நிரப்பு நிலையத்தினரும் கடைப்பிடிக்க வேண்டும்.

குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் மீது பக்கச்சார்பில்லாமல் நடவடிக்கை : அங்கஜன் இராமநாதன் கோரிக்கை | Action Taken Impartially Against Those Confusion

* பங்கீட்டு முறையை மீறுபவர்கள், வரிசை முறையை மீறுபவர்கள், திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் மீது பக்கச்சார்பில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியானதும் கடுமையானதுமான      நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

எரிபொருள் தேவைக்காக பல கஷ்டங்களோடு வாழும் மக்கள் அதனை பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அச்சமடைந்த மனநிலையோடு வரும் நிலைமை இனிவரும் காலங்களில் இருக்க கூடாது என வலியுறுத்துகிறேன்.

யாழ்ப்பாண மக்களுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக 45 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்குகின்றன.

குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் மீது பக்கச்சார்பில்லாமல் நடவடிக்கை : அங்கஜன் இராமநாதன் கோரிக்கை | Action Taken Impartially Against Those Confusion

தற்போதைய நெருக்கடி நிலையில் மாவட்டத்துக்கு கிடைக்கும் எரிபொருளை பங்கிட்டு அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.

இந்தப்பணியை செய்யத் தவறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், ஒத்துழைப்பு தர மறுத்து அடாவடியில் ஈடுபடும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என அரசாங்க அதிபர், பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US