நெருக்கடியான நிலையில் வட மாகாண மக்களின் செயற்பாடு குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்ட தகவல்
இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் வட மாகாண மக்கள் முன்னரைப் போன்று மீண்டும் விறகினை பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என கொழும்பு ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளன.
அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்வதற்கு தேவையான வெட்டிய விறகுகளை சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இதற்கு முன்னர் விறகு விற்பனை செய்வதற்கு வடக்கில் நெருக்கடியாக இருந்த போதிலும் தற்போது ஒரு மீற்றர் விறகினை 1800 மற்றும் 2500 ரூபாய் விலையில் விற்பனை செய்வது இலகுவான விடயமாகியுள்ளது என கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னர் விறகு விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை தேடி சென்று அவர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
எனினும் தற்போது வடக்கு மக்கள் எரிவாயு தட்டுப்பாடினை சமாளிப்பதற்கு அதிக அளவில் விறகுகளை பயன்படுத்துவதற்கு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
