முறையற்ற செயலில் ஈடுபடும் மதகுருமார்களுக்கு எதிராக சட்டமூலம் - செய்திகளின் தொகுப்பு
பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில், முறைகேடாகச் செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அண்மைக் காலங்களில் பௌத்த மதகுருமார்கள் சிலர் விகாரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
மத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நாம் இன, மத பேதங்களால் பாரிய அழிவுகளை எதிர்கொண்ட நாட்டவராவோம்.
ஒழுக்கமற்ற முறையில் செயற்படும் பௌத்த மதகுருமார்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan