ஒட்டுசுட்டான் நீர் வடிகாலமைப்புச் சபையின் பொதுமக்களை பாதிக்கும் செயற்பாடு
ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வளாகத்தினுள் 300 அடி ஆழத்தில் குழாய் கிணறு தோன்டப்படவுள்ளதால் பிரதேசத்தை அண்டிவாழும் மக்கள் நேற்று ஆர்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
வடிகாலமைப்புச் சபையினை அமைக்கும் போது அதன் கட்டடத்தொகுதியை மட்டும் சிவநகரில் அமைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர்.
தற்போதைய செயற்பாடு சிவநகர் மக்களின் நிலத்தடி நீரை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
குழாய் கிணறு அமைக்கும் செயற்பாடு
கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச உத்தியோகத்தரிடம் அனுமதி பெறாமல் குறித்த குழாய் கிணறு அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள்,பொலிஸ் அதிகாரி போன்றோர் கலந்து கொண்டு நீர் வடிகாலமைப்பு சபையின் செயற்பாட்டை இடை நிறுத்தினர்.
சிவநகர் மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம் காணப்படுகிறது.
300அடி ஆழத்தில் குழாய் கிணறு அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
இதனால் விவசாயம் பாதிப்படையும் என மக்கள் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
