வட மாகாண மட்ட நீச்சல் போட்டியில் ஊர்காவற்துறை கல்லூரி சாதனை
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி கிளிநொச்சியில் 27 மற்றும் 28 தேதியில் நடைபெற்றது.
இப் போட்டியில் இம்முறை முதல் தடவையாக பங்கு பற்றிய ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி பாடசாலை மாணவர்கள் வெற்றியை பெற்றனர்.
அந்தவகையில் 20 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தையும், 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் குறித்த பாடசாலை பெற்றுக் கொண்டது.
நீச்சல் போட்டி
அத்துடன் 100 back stoke நீச்சலில் ஈ.புகழ்கீரன் இரண்டாவது இடத்தையும், 1500 மீட்டர் back stoke நீச்சலில் எல்.கரிகாலன் மூன்றாவது இடத்தையும் பெற்றார்.
அதேபோல 20 வயதின் கீழ் பிரிவில் 400 மீட்டர் free style நீச்சலில் எல்.கரிகாலன் மூன்றாவது இடத்தையும், 20 வயதின் கீழ் பிரிவில் 50 மீட்டர் back stoke நீச்சலில் எல்.கரிகாலன் இரண்டாவது இடத்தையும், 4×50 மீட்டர் medley relay நீச்சலில் 20 வயதுப் பிரிவு அணி இரண்டாவது இடத்தையும், 100 மீட்டர் butterfly நீச்சலில் 20 வயதுப் பிரிவில் ஆர்.டிவோகரன் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியின் புள்ளிப் பட்டியலில் குறித்த பாடசாலையானது ஐந்தாம் இடத்தில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.