கல்முனை பிரதான வீதியில் விபத்து: - ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது, மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவர் பலத்த காயங்களுக்குட்பட்டு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
