புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு முதன்மை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(13) மாலை இடம்பெற்றுள்ளது.
படுகாயம்
37 அகவையுடைய வெள்ளப்பள்ளம் உடையார் கட்டுப்பகுதியினை சேர்ந்த சசிகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இரண்டு இளைஞர்களும் புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
எதிர் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து
விபத்தின் போது இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூன்று இளைஞர்களும் காயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையிலே விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
