திருமலையில் விபத்து : ஒருவர் மரணம்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை- முருகாபுரி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தனியார் காப்புறுதி நிறுவன முகவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை-சாம்பல்தீவு பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்ட தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான என்.பிரபாகரன் (53வயது) என திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றிரவு முருகாபுரி பிரத்தேசத்திலுள்ள தனது தாயின் வீட்டிற்கு செல்வதற்காக பிரதான வீதியினை கடக்க முட்பட்ட வேலையில் பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த நடமாடும் வெதுப்பாக முச்சக்கர வண்டி மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மேலும் விபத்து தொடர்பில் சி.சி.டீ.வி காணொளி பெறப்பட்டுள்ளபட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
