சாதாரண தர பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு நேர்ந்த கதி!
சாதாரண தர பொதுப் பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த அதிபர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வான் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பன்னேகமுவ, திஸ்ஸமஹாராம பகுதியில் அமைந்துள்ள றோயல் கல்லூரியின் பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இவர் கடமையாற்றிவந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் வீரியகம சூரியவெவ கனிது கல்லூரியின் அதிபர் எனவும் அவர் சூரியவெவ விகாரகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த அதிபரின் சடலம் திஸ்ஸமஹாராம தெபரவெவ வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரான வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
