அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! இரண்டு சிறுவர்கள் பலி - ஆபத்தான நிலையில் தாய்
மாதம்பை - குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் தாய் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இன்று காலை (28) சுமார் 05:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தும்மலசூரிய - வீரகொடியானை பகுதியை சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளாவர்.

இவ்வாறு காயமடைந்த தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam