கிளிநொச்சிப் பகுதியில் விபத்து - ஒருவர் பலத்த காயம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(02.09.2026) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்
ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மகிழுந்து(கார்) மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 15 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam