கொழும்பு பிரதான வீதியில் விபத்து - 20 பேர் படுகாயம்
கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்திசையில் பயணித்த இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகள் காயம்
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் பேருந்தில் பயணித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் வரக்காபொல தும்மலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அத்துடன், பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தலையிட்டு நிலைமையை சீர்செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
