மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து - இருவர் படுகாயம்
நுவரெலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று(16.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது நேர்ந்த விபத்து
நுவரெலியா, பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டம் இடையே நடைபெற்ற 400சிசி மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் சாரதிகள் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நுவரெலியா மாநகர சபையும், கொழும்பில் உள்ள ஒரு தனியார் சங்கமும் இணைந்து(16) மற்றும் (17) ஆம் திகதிகளில் நுவரெலியா - அம்பேவளை பிரதான வீதியில் பிளாக்பூல் பாலத்தில் இருந்து தொடங்கி, செங்குத்தான மலைகள் மற்றும் வளைந்து செல்லும் தேயிலைத் தோட்டங்கள் வழியாக மகஸ்தோட்டமம் வரை அடையும் ஒரு நேரக் கணக்கீட்டுப் பந்தயத்தை(TIMING RACE) நடத்தி வருகின்றனர்.
இதில் (16)ஆம் திகதி இடம்பெற்ற பந்தயத்தில் பல போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், நுவரெலியா பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
