மட்டக்களப்பில் பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து : மூவர் படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் பேருந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பகல் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த பேருந்துடன் சந்தி வெளியிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளானது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், குறித்த விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
