முரசுமோட்டை கமக்காரர் அமைப்பின் நிதி நடவடிக்கையில் முறைகேடு
கிளிநொச்சி முரசுமோட்டை கமக்காரர் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு அறிக்கைக்கும் குறித்த அமைப்பினால் ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களுக்கும் இடையில் பெருந்தொகை நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ளடங்குகின்ற முரசுமோட்டை கமக்கார அமைப்பின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
கடந்த மூன்றாம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்களும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
குறித்த தினத்தில் 2019 முதல் 2021 சிறுபோகம் வரைக்குமான ஐந்து போகங்களுக்கான வரவு செலவு கணக்கு அறிக்கைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படாத நிலையிலேயே சமர்ப்பிக்கப்பட்டன.
இதில் கடந்த 2019 ஆம் 2020ம் ஆண்டில் மட்டும் வரவாக ஐந்து இலட்சத்து 86ஆயிரத்து 310 ரூபா வரவாகவும் ஐந்து இலட்சத்து 64ஆயிரத்து 930ரூபா செலவிடப்பட்டதாகவும் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் 2019ம் ஆண்டு சிறுபோகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய 10இலட்சத்து 38ஆயிரத்து360 ரூபா வரவு செலவாகக் காட்டப்பட்டுள்ளது.
நேரடியாகக் கடந்த 03ம் திகதி பொதுச்சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி முறைகேடு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.


Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam