ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய அங்கீகாரம்: அப்துல்லா மஹ்ரூப் விளக்கம்
ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும் மூதூர் தொகுதியின் வேட்பாளராகவும் செயற்பட கட்சி தனக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று (05.10.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“1988ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் 35,558 வாக்குகளைப் பெற்று நாம் ஐந்து ஆசனங்களையும், 42000 வாக்குகளைப் பெற்று ஈபிஆர்எல்எப் ஐந்து ஆசனங்களையும் பெற்றது.
இளைஞர்களின் ஆதரவை பெற்ற ரணில்
நான் நேசித்த ஒரு தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பிற்கு பிறகு ஒரு தூய்மையான தலைவராக ரிஷாத் பதியுதீனை நினைத்து அவரோடு பயணித்தேன்.
ஆனால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் சேர்ந்து அவருக்காக செயற்படும் படி ரிஷாத் கூறிய போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவே, இளைஞர்களின் சமூக ஆதரவை பெற்ற ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் நான் போட்டியிடுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
