ஹபராதுவ துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியானது
காலி, ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு இரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களுக்கு இடையிலான தகராறின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலி, ஹபராதுவ பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் நேற்று இரவு (29.07.2024) மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த (பொடி சுத்தா) 34 வயதுடைய ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமே காயமடைந்துள்ளனர்.

ஹபராதுவ பொலிஸார் விசாரணை
இதன்போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொடி சுத்தா என்ற நபர் ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதுடன், போதைப்பொருள் கடத்தல், கற்பழிப்பு மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் இரண்டு வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி விட்டு வெளியேறியவர் என கூறப்படும் பொடி சுத்தா அப்பகுதியில் வசிக்கும் குண்டர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய ஆயுததாரிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri