வெள்ளத்தினால் ஏ35 பரந்தன் - முல்லைத்தீவு வீதி பாலம் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏ 35 பரந்தன் முல்லைத்தீவு விதியின் 11வது கிலோமீட்டர் கல்லுக்கு அன்மையாக அமைந்துள்ள பாலம் உடைந்துள்ளதால் முல்லை தீவுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கிளிநொச்சியில் இருந்து வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதான வீதியில் பன்னங்கண்டி பகுதியில் வீதியை வெள்ளநீர் குறுக்குறத்து பாய்ந்து வீதி முற்றாக சேதமடைந்து தற்பொழுது குறித்த வீதியுடான போக்குவரத்துகளும் தடைபட்டுள்ளது.
இதனால் இப்பிரதேச மக்கள் மாற்று வழிப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உடனடியாக குறித்த வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் மாவட்ட அனைத்து முகாமைதுவ பிரிவு பிரதி பணிப்பாளர் இரானுவத்தினர் ஈடுபட்டுள்ளனர