குற்றவியல் சட்டத்தரணியாக கடமையாற்றிய பெண் பணி இடைநிறுத்தும்
பொலன்னறுவை மேல் நீதிமன்றில் குற்றவியல் சட்டத்தரணியாக கடமையாற்றிய பெண் சட்டத்தரணி ஒருவரை ஐந்து வருட காலத்திற்கு பணியில் இடைநிறுத்தும் உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முறையற்ற முறைகளைப் பயன்படுத்தி வழக்கை விரைவுபடுத்துமாறு அவர் ஒரு அரச தரப்பு சாட்சிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட நிலையில், நீதியரசர் சிரான் குணரத்ன மற்றும் நீதியரசர் ஜனக் டி சில்வா ஆகியோர் சட்டத்தரணி பி.கே.பாலகெட்டிய, ஐந்து வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடமையாற்றுவதை இடைநிறுத்தி பெரும்பான்மை உத்தரவை பிறப்பித்தனர்.
எவ்வாறாயினும், பிரதிவாதியை 10 வருட காலத்திற்கு சட்டத்தரணியாக கடமையாற்றுவதை இடைநிறுத்தி நீதிவான் எஸ்.துரைராஜா உத்தரவிட்டார்.
தண்டனை அறிவிப்பு
இந்த நிலையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையும், பொறுப்பை ஏற்றுக்கொண்டதையும் கருத்திற்கொண்டு மென்மையான தண்டனையை விதிக்க விரும்புவதாக உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் அதிகாரிகளாக இருந்து, குற்றவியல் சட்டத்தரணிகள், கோரப்படும் நேர்மையற்ற காரியத்தை சாதிப்பதில் அக்கறையற்ற பிசாசுகளின் சட்டத்தரணிகளாக செயற்படக் கூடாது. அவர்கள் எப்பொழுதும் நேர்மையான, கௌரவமான, சட்டபூர்வமான வழிமுறைகளுக்குள் செயற்பட வேண்டும் என்று நீதியரசர் துரைராஜா குறிப்பிட்டுள்ளார்.
துஸ்பிரயோக வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவரால் தக்கவைக்கப்பட்டுள்ள பிரதிவாதி, அந்த வழக்கின் பாதிக்கப்பட்ட அரச தரப்பு சாட்சிக்கு, வழக்கை விரைவாக முடிப்பதற்கான தனது விருப்பத்தை தெரிவிக்கும் ஒரு பிரமாணப்பத்திரத்தை தயாரிப்பதில் தொழில்முறை அறிவுரைகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
அதனை தயாரிப்பதற்காக கையொப்பமிடப்பட்ட வெற்றுத்தாளை பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |