லண்டனில் கவுன்சிலர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற தமிழர்
சென்னையை சேர்ந்தவர் அப்பு சீனிவாசன். இவர் லண்டனில் உள்ள பிரதான எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் குராய்டன் பகுதியின் கவுன்சிலராக அங்குள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அப்பு கடந்த 1990ம் ஆண்டு பொறியியல் துறையில் மேல்படிப்பிற்காக லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு படித்துக் கொண்டே வேலை பார்த்தார், பின்னர் படித்து முடிப்பதற்குள் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.
தனது அறிவால் ஆற்றலால் படிப்படியாக வளர்ந்து அந்த நிறுனத்தின் முதன்மை அதிகாரியானார். இவரால் நிறுவனம் வளர்ந்தது, நிறுவனத்தால் இவரும் வளர்ந்தார்.
இப்படி படிப்படியாக முன்னேறி லண்டனில் ஒரு முக்கியமான நபராக மாறினாலும் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து சொந்தமாக தொழில் துவங்குவது வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் பிரச்னைகளும் மிக அதிகம்.
தமிழர்கள் மனதில் தனி இடம் பிடித்த சீனிவாசன்
தனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் புதிதாக லண்டனுக்கு பிழைக்கவரும் எந்த தமிழனுக்கும் ஏற்படக்கூடாது என்று நினைத்து ‛குராய்டன்' தமிழ் சங்கத்தை ஏற்படுத்தி அந்த சங்கத்தின் மூலம் லண்டன் வரும் தமிழர்களுக்கும், வந்த தமிழர்களுக்கும் பெரும் உதவி செய்துவருகிறார்.
இவரது இந்த உதவும் மனப்பான்மை காரணமாக லண்டன் வாழ் தமிழர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார், அப்பண்ணன் சொன்னால் போதும் என்றளவில் மரியாதையைப் பெற்றுள்ளார். இப்படி தமிழர்கள் மத்தியில் இடம் பிடித்தது போல லண்டன் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளார்.
கொரோனா நேரத்தில் மக்களுக்காக சிறந்த முறையில் தொண்டு செய்தவர் என்ற மகத்தான விருது வழங்கப்பட்டது.
இந்த நேரத்தில் தான் கவுன்சிலர் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
