அரசியல் ரீதியில் மகிந்த எடுத்துள்ள திடீர் தீர்மானம் - அதிர்ச்சியில் கட்சியினர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பின்வாங்க தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, அவர் பிரசார மேடைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பின்வாங்கும் மகிந்த! கட்சியினர் அதிருப்தி
மகிந்த ராஜபக்சவின் உடல் நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமையவே அவர் 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான பலமும் மக்கள் செல்வாக்கு பெற்ற நபராகவும் மகிந்த மட்டுமே உள்ளார்.
இந்நி்லையில் தேர்தல் பிரசாரங்களில் அவர் பங்கேற்காமை பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கட்சிக்காரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
