அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் தனது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான நெலோமி பெரேரா என்பரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவன் கைது
இக்கொலை தொடர்பில் அவரது கணவர் மெல்போர்ன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்தபோது, நெலோமி பெரேராவின் மகள் அயல் வீடுகளுக்குச் சென்று உதவி கோரியுள்ளமை சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
நெலோமி பெரேராவின் மகள் வந்து “எனது தாய் இறந்துவிட்டார், எனது தாயார் இறந்துவிட்டார்” என்று கூறியதாக அயலவர்கள் பொலிஸாரிடம் சாட்சியமளித்துள்ளனர்.
சந்தேகநபரான தினுஷ் குரேரா, நெலோமி பெரேராவின் வளர்ப்பு மகனையும் தாக்கியதாகத் தெரிவித்த மெல்பேர்ன் பொலிஸார், அவருக்கு பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri
