மன்னாரில் பெரும் போக செய்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் வருகின்ற வயல் நிலங்களுக்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான 2024-2025 கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(18) உயிலங்குளத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்,பிரதேச செயலாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது விவசாய குழு,அதனுடன் இணைந்த 30 விவசாய அமைப்புகள் அழைக்கப்பட்டு,குறித்த கூட்டம் இடம் பெற்றது.
திணைக்கள அதிகாரிகள்
மேலும், விவசாயத்துடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது முன்வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக பயிர்ச் செய்கைக்கு உத்தேசிக்கப்பட்ட நிலப்பரப்பாக இவ்வருடம் 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலம் இம்முறை பெரும்போக நெற்செய்கை காக பயன்படுத்தப்பட உள்ளது.
அதற்கு அமைவாக இவ்வருட பெரும்போக விவசாய தயார் படுத்தலுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி (27-10-2024) முதலாவது நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
விதைப்பு
இறுதித் திகதியாக 4-11-2024 திகதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.41ஃ2 மாத
நெற்களுக்கு விதைப்பினை 7-11-2024 திகதிக்கு முன்பாகவும், 3 தொடக்கம் 3 1/2
மாத நெல்லினங்கள் 26-11-2024 க்கு முன்பாகவும் 2 1/2 மாத நெல்லினத்தை விதைக்க
விரும்புபவர்கள் 26-11-2024 க்கு முன்பாகவும் விதைப்பை மேற்கொள்ளுமாறு
அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.