மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட விழிப்புணர்வு நிகழ்வு
மட்டக்களப்பில் கிழக்கிலங்கை மனிதவள பொருளாதார அபிவிருத்தி நிலையத்தினால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சமூகங்களுக்கு இடையில் தோற்றுவிக்கப்படுகின்ற முரண்பாட்டிற்குரிய
தீர்வுகளை முன்னெடுப்பது சம்பந்தமாக குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ஜெய நிக்சன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் எவ்வாறு தோற்றுவிக்கப்படுகின்றன, அவற்றை எவ்வாறு எதிர்கொண்டு அதற்குரிய தீர்வுகளை முன்னெடுப்பது, தொடர்பில் இதன்போது கலந்து கொண்டவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வாளவாளரால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
எதிர்கால அபிவிருத்தி
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சமூகங்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுவதும் அதனால் அவை சமூகத்தின் எதிர்கால பொருளாதார அபிவிருத்தியில் எவ்வாறு தாக்கங்களை செலுத்துகின்றன போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் சமூக பணியகத்திற்கான சமாதான செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மத நல்லிணக்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |