இரத்மலானையில் சிறிய ரக குண்டு வெடிப்பு! இருவர் காயம்
இரத்மலானை கல்தெமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் வயோதிப தம்பதியினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளது.
குறித்த வயோதிப தம்பதியினர் வீட்டிற்கு முன்பாக உள்ள காணியை துப்பரவு செய்து தீயிட்டுக் கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரசாயனப் பகுப்பாய்வாளர் அழைப்பு
குண்டு வெடித்ததில் இருந்து சிதறப்பட்ட சிறிய இரும்புத் துகள்கள் தம்பதியின் கை, கால்களில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த தம்பதியினர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தற்போது அப்பகுதி மூடப்பட்டு, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
