சர்வதேச ஊடகக் குழு ஒன்றினால் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சிபிஜே என்ற சர்வதேச ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, இலங்கை அரசாங்கத்தின் உத்தேச இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறு, பொது பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.
அமைச்சருக்கு அனுப்பிய கூட்டுக் கடிதத்தில் ஏனைய 58 அமைப்புகளுடன் சேர்ந்து, சம்பந்தப்பட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு அந்தக்குழு கோரியுள்ளது.
அத்துடன், இது தொடர்பாக ‘உள்ளூர் குழுக்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் அர்த்தமுள்ள ஆலோசனைகளை நடத்துமாறும் அமைச்சர் திரான் அல்லஸை குழு வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களில் இந்த யோசனை கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
உத்தேச யோசனை
எனினும், இவை குறித்து பங்குதாரர்கள், வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகம் எழுப்பிய முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமலும் இலங்கையில் உள்ள மக்களுக்கு உரிமையுள்ள அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டக் கருவிகளை புறந்தள்ளியும் உத்தேச யோசனை இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உத்தேச சட்டமூலம் பேச்சு சுதந்திரத்தின் மீது தாக்க விளைவைக் கொண்டிருப்பதுடன் நிபுணர்களின் பரிந்துரைகளை இணைக்கத் தவறியுள்ளது.
எனவே, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் இணையவழி வேலைவாய்ப்புக்கான வழிகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச ஊடக பாதுகாப்புக்குழு தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |