மதவழிபாட்டுத்தலங்களுக்கு சோலார் பேனல்கள் பொருத்தும் திட்டம் ஆரம்பம்
மத வழிபாட்டுத் தலங்களில் சோலார் பேனல்கள் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு 4 விகாரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார். அதற்காக இந்திய அரசு 10 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக கல்வி நிலையங்களுடன் இயங்கும் அனைத்து மதவழிபாட்டுத் தலங்களிலும் சோலார் பேனல்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்குள் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் சோலார் பேனல்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

102 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை விற்கும் பிரித்தானிய பெண்! காரணம் கூறும் 104 வயது மூதாட்டி News Lankasri
