கண்டியில் சிறுவர்களின் தகாத காணொளியுடன் சிக்கிய நபர்
கண்டில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகளை தரவிறக்கம் செய்த நபர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போன மற்றும் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுவர்களுக்கான தேசிய நிலையம் என்ற விஷேட பிரிவின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த ஒருவர் சுமார் 100 சிறுவர் ஆபாசக் காணொளிகளையும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த மாதம் சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை கண்காணிக்கும் வகையில் கடந்த மாதம் கொழும்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தில் புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்மூலம் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்டிஐஜி அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாண்டு 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபாசக் காணொளிகள் மற்றும் சிறுவர் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
விசாரணையின் பின்னர் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக சந்தேக நபரின் ஐபி முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் அவர்களிடம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam