நுவரெலியா - லிந்துலையில் 14 வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி
நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடச் சென்ற 14 வயதுடைய சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (25.02.2024) பிற்பகல் 2.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையை சேர்ந்த என்.ஜீ டிலிப்ப கமகே என்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சடலமாக மீட்பு
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுவன் தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நகருக்கு சென்று நாகசேனை ஆற்றில் மூவருடன் நீராடிக் கொண்டிருந்த வேளையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந் நிலையில் பிரதேச மக்களின் உதவியுடன் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், சடலமானது பிரேத பரிசோதனைக்காக தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருன்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
