உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை(08.05.2023) மேலும் பத்து விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை
2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இவ்வாறு விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட்டு விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri