இளவாலையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
இளவாலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் தங்கநகை மற்றும் ஒரு கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இளவாலை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கநகை களவுபோயுள்ளது.
நீண்ட நாட்களாக வலைவீசிய பொலிஸார்
இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருடனை கைது செய்வதற்கு நீண்ட நாட்களாக இளவாலை பொலிஸார் வலைவீசி வந்துள்ளனர்.
இந்நிலையில் இளவாலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் களவுபோன தங்கநகை மற்றும் ஒரு கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
