எரிபொருள் தாங்கி மோதியதில் யாழ். மரபுரிமைச் சின்னம் முற்றாக சேதம் (Photos)
எரிபொருள் தாங்கி ஒன்று மோதியதில் யாழ்ப்பாணம் - நுணாவில் ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
இன்றைய தினம் (11.04.2023) இடம்பெற்ற இந்த விபத்தில், தொல்பொருள் திணைக்களத்தினால் மரபுரிமை சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த பாரம்பரிய சுமைதாங்கியே முற்றாக சேதமடைந்துள்ளது.

முற்றாக அள்ளிச் சென்றுள்ளனர்
மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட இந்த சுமைதாங்கி, இளைப்பாறும் மடம், குடிநீர்க்கிணறு என்பன காணப்படுகின்றன.
இவ்விபத்தினால் நொறுங்கிய சுமைதாங்கியின் கற்களை நுணாவில் வசிக்கின்ற தனிநபர் ஒருவர் உழவு இயந்திரத்தின் மூலம் முற்றாக அள்ளிச் சென்றுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் அப்பகுதியிலிருந்து பொலிஸாரால் கொண்டு செல்வதற்கு முன்னரே விபத்தினால் இடிந்த சுமைதாங்கி கற்களைச் சுமைதாங்கி ஒன்று அவ்விடத்திலிருந்ததற்கான அடையாளமே தெரியாமல் பொலிஸார் முன்னிலையிலேயே அகற்றியமை அப்பகுதி மக்களுக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொல்பொருள் திணைக்களம்
இன்றைய தினம் (11.04.2023) காலை 8 மணி அளவில் குறித்த இடிந்த கற்களைப் பொதுமக்கள் பொலிஸார் முன்னிலையில் குறித்த நபர் அள்ளிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாகவச்சேரி நகரசபைக்கு உடனடியாக அறிவித்தும் குறித்த இடத்திற்குச் சம்பந்தப்பட்ட எவரும் வருகை தரவில்லை.
இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மூலமாகத்
தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவித்ததை அடுத்துக் குறித்த திணைக்களத்தினது
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.










விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam