எரிபொருளுடன் இலங்கையை வந்தடைந்த வெளிநாட்டுக்கப்பல்
சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுடன் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலில் 40,000 மெற்றிக் தொன் டீசல் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த கப்பலிலிருந்து 40,000 மெற்றிக் தொன் டீசல் இறக்கும் பணி நேற்று (17ஆம் திகதி) ஆரம்பமானதுடன், இந்த பணிகள் சுமார் இரண்டு நாட்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலும் 36,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு எண்ணெய் தாங்கி கப்பல் இன்று (18) வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் 40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை (19ஆம் திகதி) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லை எனவும், மக்கள் எரிபொருளை வீடுகளில் சேமித்து வைக்க வேண்டிய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
