வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி பலி
காலி உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் கூறியுள்ளனர்.
மலேசிய நாட்டைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் நேற்று (25) மாலை நீராடச் சென்ற நிலையில், நீரோட்டத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
பிரதேசவாசிகளின் உதவியுடன் சுற்றுலாப்பயணி மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அசேலபுர பிரதேசத்தில் உள்ள கால்வாயில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று (25) இரவு நீராடச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிகந்த, அசேலபுர பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு News Lankasri
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan