காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கைக்கு சாதகமாகியுள்ள பொதுவேட்பாளர் விவகாரம்
தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கையினையும் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதற்கு சிறந்த வாய்ப்பாக பொதுவேட்பாளர் விடயம் காணப்படுவதாக கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், சங்கு சின்னத்திற்கும் பொதுவேட்பாளருக்கும் மாத்திரம் வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(17.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
இந்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி,திருகோணமாலை மாவட்ட தலைவி செபஸ்டியான் தேவி,அம்பாறை மாவட்ட தலைவி த.தேவராணி ஆகியோர் கலந்துகொண்டு தமது பொதுவேட்பாளருக்கான ஆதரவு கருத்துகளை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி,
“எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்காக எங்களுடைய தமிழ் உறுப்பினரை இதில் ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கின்றார்கள்.
15 வருடங்களாக யுத்தம்
கடந்த 15 வருடங்களாக யுத்தம் முடிவுற்ற பிறகு எங்களுடைய உறவுகளுக்கு நீதி கேட்டு இந்த சிங்கள அரசின் தலைமைகள் ஊடாக எங்களுடைய உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்த நிலையிலும் எந்த ஒரு துளியேனும் தங்களுக்கான தீர்வு வரவில்லை.
இந்நிலையில், நாங்கள் ஒவ்வொரு நாளும் கண்ணீரோடும் வேதனையோடும் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கை இல்லாமல் சர்வதேச ஒருமுறையை நோக்கி நாங்கள் பயணிக்கும் இந்த வேளையில், ஒரு தமிழராக தமிழினத்திற்காக சங்கு என்னும் நமது அடையாள சின்னத்தை நமக்காக எமது மக்களுக்காக அனைவரும் சேர்ந்து இந்த கட்டமைப்பை உருவாக்கி தமிழ் இனத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு காலமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்டு இருக்கின்றது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
