கெஹெலியவிடம் 100 மில்லியன் ரூபா இழப்பீடாக கோரிக்கை
கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பார்வையிழந்த நோயாளி ஒருவரினால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் இழப்பீடுக்கோரி கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அரச மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் 'ப்ரெட்னிசோலோன் அசிடேடீன்' என்ற கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை கடிதம்
கந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சையினால் கண்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் உயிர் அச்சுறுத்தல்களுக்குள்ளான 8 பேருக்கு 100 மில்லியன் ரூபாவை இழப்பீடாகக்கோரி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் பணத்தை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri