எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம்! ரணில் எடுத்துள்ள தீர்க்கமான முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
இப்போது, ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வேலை மற்றும் பிற அத்தியாவசிய வேலைகளை நிர்வகிக்க எரிபொருள் உள்ளது. எவ்வாறாயினும், நிலவும் பொருளாதார நிலைமைகள் காரணமாக எரிபொருள் விநியோகத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்
தற்போது, இரண்டு மணி நேரமாக மின்வெட்டு குறைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி எரிவாயு வழங்கப்படுகிறது.
ரணில் எடுத்துள்ள தீர்க்கமான முடிவு
எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நுரைச்சோலை மின் நிலையத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் காரணமாகவே இந்தளவுக்கு கூட மின்சாரத்தை வழங்க முடியுமாக உள்ளது.
கடந்த காலங்களில், அனைத்து முன்னாள் அரசுகளும் குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு செல்லவில்லை.
அதனால்தான் அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் மின்சாரச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதும் நிறைவேற்றப்பட்டு சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வேலைத்திட்டம் வகுக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்க்கமான மற்றும் சவாலான முடிவுகளை எடுத்து செயற்படுகின்றார்.
எமக்கு எத்தகைய அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் சார்பாக ஜனாதிபதி எடுத்துள்ள நிலைப்பாட்டில் நாங்கள் திருப்தியடைவதுடன் அவருக்கு எமது பூரண ஆதரவை வழங்குகின்றோம்.