அமைச்சர்களை நியமித்துள்ள கோட்டாபய! மாற்றும் வாய்ப்பு ரணிலுக்கு
தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையே காணப்படுகிறது. எதிர்காலத்தில் அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணினால் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ எமக்கு அதிகாரம் கிடையாது. தேர்தல் ஆணைக்குழுவும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுமே தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுப்பர். எவ்வாறிருப்பினும் எந்தவொரு தேர்தலானாலும் அதில் போட்டியிடுவதற்கும் , எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

தற்போது சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். நாடு தற்போதுள்ள நிலைமையில் இது பொறுத்தமற்ற செயற்பாடாகும். உலகிலுள்ள ஏனைய பல நாடுகள் எம்மை விட கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. எனவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிடம் உரிமைகளை தவறானகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையே காணப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரும்பும் பட்சத்தில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம்.
எனினும் அதன் எண்ணிக்கை 30 ஆகவே காணப்படும். புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடிய நிபுணத்துவம் மிக்கவர்களாகக் காணப்பட வேண்டும்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்மெனில் அதற்கு சிறந்த நிபுணர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். நியமனம் பெறுபவர்களால் நாட்டுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கப் பெற வேண்டும்.
ஆனால் இன்று எமது நாட்டில் மக்கள் பலத்தை மாத்திரம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் எவ்வித பலனும் இன்றி பதவி வகித்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறானவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam