பெண் ஒருவருக்கு எமனாக வந்த பூனை - தென்னிலங்கையில் ஏற்பட்ட சோகம்
தென்னிலங்கையில் பூனை கடிக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தல்பே கிழக்கு பிரதேசத்தில் பூனை கடித்ததன் காரணமாக இடது காலில் ஏற்பட்ட காயத்தினால் கிருமி தொற்றுக்கு உள்ளான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கியபோது வீட்டுப் பூனை இடது காலில் கடித்துள்ளது.
இதனை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் அது ஆபத்தாக மாறியுள்ளது. ஹபராது களுகல வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 28 ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
பூனை கடித்ததால் ஏற்பட்ட காயத்தில் இருந்து கிருமிதொற்று ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
