தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கின் பின்னணியில் இருப்பது யார் - சந்திரசேகரன் பரா பகிரங்கம்
தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கை எமது கட்சிக்காகவே போட்டேனே தவிர யாரும் சொல்லி இந்த வழக்கை பதிவுச் செய்யவில்லை என திருகோணமலை சாம்பல் தீவு வட்டார கிளையின் செயலாளர் சந்திரசேகரன் பரா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் நேற்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தின் சார்பில் நாங்கள் போடப்பட்ட வழக்கானது கட்சியின் யாப்புக்காகவும், கட்சியில் திருத்தங்கள் செய்வதற்காகவும் தான் என்று சொல்லி இருந்தேன்.
இதை திருகோணமலை மாவட்ட மதத்தலைவர் ஏற்றுக்கொண்டு சுமுகமாக முடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நானும் அதற்கிணங்க அங்கு வருகைதந்திருந்த அனைவரிடமும் முன்வைத்த கோரிக்கை என்னவென்றால் எமது யாப்பின்படி திருத்திக்கொண்டு சரிவர செய்வேன் என்றும் உறுதியளித்திருந்தேன்.
ஆனால் சில நபர்களால் பொய்யான வதந்தி பரப்பப்படுகிறது. நான் சொன்னதாக சுமந்திரன் எம்.பி அவர்களையும், சாணக்கியன் எம்.பி அவர்களையும் கேட்டுத்தான் சொல்வேன் என்று சில ஊடகங்களிலும் வந்தது. ஆனால் அப்படியான சம்பவமொன்றும் நடக்கவில்லை.
இதை சரியாக விசாரிக்க வேண்டும் என்றால் எங்கள் மூத்த தலைவர் சிவஞானம் ஐயாவுடன் வினவினால் அதற்குரிய பதிலை அவர் தருவார். எமது கட்சிக்காகவே வழக்கு போட்டேனே தவிர யாரும் சொல்லி இந்த வழக்கை பதிவுச் செய்யவில்லை.கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்பதற்காகவே போடப்பட்டதே தவிர என் சுய நன்மைக்காக போடவில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி ப்ளாக் பஸ்டர் வெற்றி.. அஜித் அடுத்த படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
