பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் - ரணில் இடையே இரு தரப்பு கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துபாயில் நடைபெறும் COP 28 பிரதான மாநாட்டில் கலந்துகொள்ள அங்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதன்போது இலங்கையின் பொருளாதாரத்தில் பசுமையான மாற்றத்திற்கான யோசனைகள் பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு
மேலும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்துடன் (IORA) பிரான்சின் உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழக திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri