கொழும்பில் பெருந்தொகை பணத்தால் ஏற்பட்ட பரபரப்பு
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் விஷேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போன்று வேடமணிந்து மூவர் 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடிக்கு முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளை தப்பிச் சென்ற ஒருவர் பிடிக்கப்பட்டார். மற்றைய சந்தேக நபர் பணப் பையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெப் ஒன்றில் பணம் கொண்டு வரப்பட்டதுடன், மூன்று கொள்ளையர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போல் நடித்து பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, கெப் வண்டி மோட்டார் சைக்கிளில் மோதியதில், சாரதி மோட்டார் சைக்கிளுடன் தரையில் விழுந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற நபர் மோட்டார் சைக்கிளை இயக்கி பணம் இருந்த பையுடன் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பணம் அடங்கிய பையுடன் தப்பிச் சென்ற நபர் பொலிஸ் ஹெல்மெட் போன்று தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கீழே விழுந்த நபர் கெப் வண்டியில் இருந்த இருவரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர். சந்தேக நபரிடம் பொலிஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர்.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
